ஞாயிறு, 29 ஜூலை, 2012

தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை

Published:Sunday, 29 July 2012,
தற்போது வாகனங்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை கொண்டு இயக்கப்படுகின்றன. இதன் தேவைப்பாடு அதிகரித்து விலையும் கூடி வருகிறது. இதனால் மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக கவனம் செலுத்துகிறார்கள்.
இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த இளம் என்ஜினீயரான வாகர் அகமது என்பவர் தண்ணீரை எரிபொருளாக வைத்து காரை இயக்கி அரிய சாதனையை படைத்திருக்கிறார். இந்த காரின் வெள்ளோட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் முன்னிலையில் இயக்கினார்.
இந்த புதிய தொழில்நுட்பமானது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (டிஸ்டில் வாட்டர்) இருந்து ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து கார் என்ஜின் இயங்குகிறது. 1000 சி.சி. திறன் கொண்ட காரை ஒரு லிட்டர் தண்ணீர் மூலம் 40 கிலோ மீட்டர் தூரமும், மோட்டார் சைக்கிள்களை 150 கிலோ மீட்டர் தூரமும் இயக்க முடியும் என்றும் வாகர் அகமது கூறுகிறார்.


செவ்வாய், 24 ஜூலை, 2012

இந்த நண்டில் தெரிவது ஏசுநாதரா? ஒசாமாவா?

Published:Monday, 23 July 2012, 16:12 GMTUnder:Leisure
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள எவரெட்டில் பிடிக்கப்பட்ட நண்டின் வயிற்றுப் பகுதியில் இயேசு நாதரின் உருவம் தெரிந்துள்ளது. ஆனால் அந்த உருவம் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் போன்றும் தெரிவதாக பலர் கூறுகின்றனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள எவரெட்டில் கேன்பீல்டு குடும்பத்தார் கடந்த வாரம் நண்டு பிடித்தனர். அவர்கள் பிடித்த நண்டுகளை வீடியோ எடுத்து பார்த்த போது நண்டின் வயிற்றுப் பகுதியில் இயேசு நாதர் உருவம் தெரிந்தது.
ஆனால் அந்த உருவம் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் போன்றும் உள்ளதாக பலர் தெரிவித்தனர். அந்த உருவம் கொண்டது பெண் நண்டு என்பதால் அவர்கள் அதை கடலிலேயே விட்டுவிட்டனர். ஆனால் அவர்களிடம் உள்ள வீடியோ மட்டுமே இந்த அதிசயத்திற்கு ஆதாரம் ஆகும்.
கேன்பீல்டு குடும்பத்தார் மிகவும் நியமானவர்கள், வேண்டும் என்றே வதந்தியைக் கிளப்பி விடுபவர்கள் அல்ல என்று அவர்களை நன்கு தெரிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் கந்தன் உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது

July 24, 2012
நல்லூர் கந்தன் உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந் திருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாள்கள் திருவிழா இடம்பெறவுள்ளது.
ஓகஸ்ட் 2 ஆம் திகதி வியாழக்கிழமை மஞ்சம் மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கார்த்திகை திருவிழாவும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்தான கோபாலர் திருவிழாவும் அன்று மாலை கைலாச வாகனத் திருவிழாவும் இடம்பெறும்.
ஓகஸ்ட் 13 ஆம் திகதி காலை கஜவல்லி, மகாவல்லி திருவிழாவும் மாலை வேல் விமானமும் இடம்பெறும். 14 ஆம் திகதி தண்டாயுதபாணி திருவிழாவும் மாலை ஒருமுகத் திருவிழாவும் 15 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும் இடம் பெறும். ஓகஸ்ட் 16 ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெறும். மறுநாள் 17 ஆம் திகதி தீர்த்தத் திருவிழா இடம்பெறும். 18 ஆம் திகதி பூங்காவனமும் 19 ஆம் திகதி வைரவர் திருவிழாவும் இடம்பெற்றுத் திருவிழா நிறைவடையும்.
கடந்த ஆண்டுகளை விட இந்த முறை அதிக எண்ணிக்கையான அடியவர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியப்பில் ஆழ்த்தும் முப்பரிமாண ஓவியங்கள்

சீனாவில் முப்பரிமாண ஓவியங்களின் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் யாவும் பார்ப்போரை மேஜிக் போன்று மாயையில் ஆழ்த்தும் ஆற்றல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.








ஞாயிறு, 22 ஜூலை, 2012

இன்று பூமியை கடந்து செல்கிறது சிறிய கோள்: இணையத்தில் நேரடியாக காணலாம்

[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 09:40.01 மு.ப GMT ]
சூரியனை சுற்றி வரும் சிறிய கோளான 2012- LZI, இன்று மாலை பூமியை கடந்து செல்ல உள்ளது.
விஞ்ஞானிகளே எதிர்பாராத வகையில் இந்த சம்பவம் இன்று நடைபெற உள்ளது.
இச்சிறுகோள் பூமிக்கு அருகில் வருவதை, ஸ்லூ என்ற விஞ்ஞானக் கூடத்தில் உள்ள விண்வெளிப் ஒளிப்படக்கருவி மூலமாக http://events.slooh.com/ இணையத்தளத்தில் நேரடியாக காணலாம்.
இன்று மாலை 4.30 முதல் 7.30 வரை நடைபெறும் இந்த ஒளிபரப்பில் ஸ்லூவின் பேட்ரிக் பவுலுச்சியும், வானவியல் இதழாளர் பாப் பெர்மனும் இச்சிறுகோள் குறித்து உரையாட உள்ளனர்.
இந்தச் சிறுகோள் 620 மீ முதல் 1.4 கி.மீ(2000 – 4500 அடி அகலம்) பரப்பளவு உடையது. ஒரு நகரத்தின் அளவு தான் இக்கோளின் பரப்பளவாக காணப்படுகிறது.
சந்திரன் சுற்றி வரும் தூரத்தை விட 14 மடங்கு அதிகமான தூரத்தை இச்சிறுகோள் சுற்றி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 10 ஜூலை, 2012

புத்தகங்களினால் வடிவமைக்கப்பட்ட குடில்கள்

நூற்றுக்கணக்கான புத்தகங்களினால் வடிவமைக்கப்பட்ட அழகாக காட்சியளிக்கும் குடில்கள் (Igloo).





சனி, 7 ஜூலை, 2012

கைத்தொலைபேசிக்குள் இருந்து மைய்ட்டா பூச்சி கண்டுபிடிப்பு!

[ வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 01:49.00 PM GMT ]
 கையடக்கத் தொலைபேசி ஒன்றிலிருந்து மைய்ட்டா எனப்படும் மிகச் சிறிய வகையான பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு, பொரளை பரிசோதனை கூடத்திற்குச் சென்ற நபரொருவர் தனது மனைவி பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசியில் ஒருவகை சிறிய பூச்சி காணப்படுவதாகவும் கடந்த சில நாட்களாக தனது மனைவி காது வலியால் அவதிபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த கையடக்கத் தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் மைய்ட்டா எனப்படும் மிகச் சிறிய வகையான பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொரளை பரிசோதனை கூடத்தின் வைத்திய பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதற்கு முன்னரும் களுத்துறை பிரதேசத்தில் நபரொருவரின் காதில் இருந்து மையட்டா பூச்சி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.